அம்பாங்கில் ஐஎஸ் ஆள் என்ற சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது

ampangபோலீசார்  நேற்று  அம்பாங்கில்  ஐஎஸ்  தொடர்புள்ளவர்  என்ற  சந்தேகத்தின்பேரில் ஒருவரைக்  கைது  செய்தனர்.

இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்   அபு  பக்கார்  இன்று  காலை  டிவிட்டரில்  இதைத்  தெரிவித்தார்.

“அம்பாங், ஜெலதேக்  எல்ஆர்டி-இல்  ஐஎஸ்  தொடர்புள்ளவர்  என்ற  சந்தேகத்தின்பேரில்  ஓர்  ஆடவரைக்  கைது  செய்த  சிறப்புப் பிரிவு  E8 யூனிட்டுக்குப்  பாராட்டு.

“ஆயுதங்களும்  ஆவணங்களும்  கைப்பற்றப்பட்டன”, என்றவர்  குறிப்பிட்டிருந்தார்.

E8 பயங்கரவாத- எதிர்ப்புப்  பிரிவாகும்.

வியாழக்கிழமை  ஜகார்த்தாவில்  நிகழ்ந்த  ஐஎஸ்  தாக்குதலை  அடுத்து  மலேசியாவில்  அதிகாரிகள்  பாதுகாப்பை  வலுப்படுத்தி  இருக்கிறார்கள்.