10 மில்லியன் பேர் வாழும் ஜாகார்த்தாவில் மகளிர்-மட்டுமே போக்குவரத்துச் சேவைகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. பெண்கள் இவற்றில் பயணம் செய்வது வசதியாகவும் இருக்கிறது. பாதுகாப்பாகவும் இருக்கிறது.
லேடிஜெக்கும் சிஸ்டர் ஓஜெக்கும் மகளிர்-மட்டும் டெக்சி சேவையைத் தொடங்கி நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. ஆனால், தொழில் அருமையாக நடக்கிறது.
“பொது மினிவேன் போன்றவற்றில் இடம் சின்னதாக இருக்கும். ஆண்கள் நிரைய பேர் இருப்பார்கள். எனக்கு மிகவும் அசெளகரியமாக இருக்கும். அதனால், லேடிஜெக்கில் பயணம் செய்வது பாதுப்பாக இருக்கிறது. இங்கு மோட்டார் சைக்கிளை ஓட்டுபவரும் பெண்ணாகவே இருக்கிறார்”, என்று லேடி ஜெக் மோட்டார் சைக்கிளில் ஏறி அமரும் முன்னர் உகி பிரதிவி என்ற பயணி கூறினார்.
அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட லேடிஜெக்கின் சேவையை நூற்றுக்கணக்கான இந்தோனேசியர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் அதன் நிறுவனர் பிரியான் முல்யாடி.
அந்நிறுவனம் 2,400 ஓட்டுனர்களை வேலைக்கு வைத்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் இல்லத்தரசிகளும் மாணவிகளுமாவர்.