டிபிபிஏ-எதிர்ப்புப் பேரணியில் பெர்சேயும் இணைகிறது, பேரணி பெர்சே4-கை விட பெரிதாக இருக்கும்

antiசனிக்கிழமை  கோலாலும்பூர்  டாட்டாரான்  மெர்டேகாவில்,  பசிபிக்  மண்டல  வர்த்தகப்  பங்காளித்துவ  ஒப்பந்த(டிபிபிஏ)த்துக்கு  எதிரான  கண்டனப்  பேரணியில்  பெர்சேயும்  சேர்ந்துகொள்ளும்.

இதனைத்  தெரிவித்த  பெர்சே  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா,  அது  ஆகஸ்ட்  மாதம்  நடைபெற்ற  பெர்சே 4  பேரணியைவிடப்  பெரிதாக  இருக்கும்  என்றார்.

பந்தா டிபிபிஏ  என்னும்  என்ஜிஓ-களின்  கூட்டமைப்பால்  ஏற்பாடு  செய்யப்பட்டிருக்கும்  டிபிபிஏ- எதிர்ப்புப்  பேரணி  பாஸ்,  பிஎஸ்எம்  போன்ற  எதிரணிக்  கட்சிகளின்  ஆதரவையும்  பெற்றுள்ளது.

“பெர்சே ஆதரவை  வரவேற்கிறோம்”, என  பந்தா  டிபிபிஏ  துணைத்  தலைவர்  அஸ்லான்  ஆவாங்  கூறினார்.

பிற்பகல்  மணி 2க்குத்  தொடங்கி  மூன்று  மணி  நேரம்  நடைபெறும்  அப்பேரணியில்  பெரும் திரளான  கூட்டத்தை  எதிர்பார்க்கிறார்  அஸ்லான்.

அமைதிப்  பேரணிச்  சட்டத்துக்கிணங்கக்  கண்டனப்  பேரணி  குறித்து  10  நாள்களுக்கு  முன்னதாகவே  போலீசுக்குத்  தெரியப்படுத்தி  விட்டதாகவும்  அவர்  கூறினார்.