1எம்டிபி, பண்டார் மலேசியா பங்குகளை IWH-CREC (இஸ்கண்டர் மலேசியா ஹோல்டிங்ஸ்- சீன ரயில்வே எஞ்சினியரிங் கார்ப்பரேசன்) குழுமத்துக்கு விற்பதைத் தடுக்கும் முயற்சியில் பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி முழுமூச்சாக இறங்கியுள்ளார்.
அந்த விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு தாபோங் ஹாஜி(டிஎச்)க்கும் பணிஓய்வு நிதி நிறுவன(KWAP)த்துக்கும் கடிதம் எழுதப்போவதாக பாண்டான் எம்பி கூறினார்.
அத்துடன் பொதுமக்களிடமும் சென்று டிஎச்-சுக்கும் கேடபுள்யுஏபி-க்கும் கடிதம் எழுதுமாறும் அவர் கேட்டுக்கொள்வார்.
“பண்டார் மலேசியாவில் 1எம்டிபிக்குள்ள பங்குகளில் 60 விழுக்காட்டை விற்பதற்கு டிஎச் மற்றும் கேடபுள்யுஏபி-வின் அனுமதி தேவை என்பதால் (விற்பனையைத் தடுக்க) நான் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்”, என ரபிஸி கூறினார்.