வீழ்ச்சியைத் தடுக்க விரைந்து செயல்படுவீர்: ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வலியுறுத்து

jasinமுகைதின்  யாசின்,   தெங்கு  ரசாலி  ஹம்சா  போன்ற  அம்னோ  அரசியல்வாதிகளும்  மலாய்  ஆட்சியாளர்களும்  விரைந்து  செயல்பட்டு  நாடும்  நாட்டின்  பொருளாதாரமும்  மேலும்  வீழ்ச்சியடைவதைத்  தடுத்து  நிறுத்த  வேண்டும்  என     மூத்த  செய்தியாளர்  ஏ.காடிர்  ஜாசின்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

2013  பொதுத்  தேர்தலுக்குப்  பின்னர்  பல  முறைகேடுகளை  எதிர்நோக்கிவரும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  நாட்டை  ஆளும்  அதிகாரத்தைத்  தார்மீக  ரீதியில்  இழந்து  விட்டார்  என   நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸின்  முன்னாள்  தலைமை  செய்தியாசிரியரான  அவர்  தம்  வலைப்பதிவில்  கூறினார்.

ஜனவரி  4-இலிருந்து  ஒன்பது  நாள்களில்  பங்குச்  சந்தை  5.3விழுக்காடு  இறக்கம்  கண்டது.  டாலருக்கு  எதிராக  ரிங்கிட்டின்  மதிப்பும்  24.6விழுக்காடு  சரிந்திருக்கிறது.

பங்குச்  சந்தையின்  ஏற்ற இறக்கமே  முதலீட்டாளர்களின்  நம்பிக்கையைக்  காண்பிக்கும்  அல்லது  மதிப்பிடும்  அளவுகோல் என  அம்மூத்த  செய்தியாளர்  கூறினார்.