வார இறுதியில் பத்துமலை தைப்பூசத் திருவிழாவுக்கு பக்தர்கள் பயமின்றி போய்வரலாம் என சிலாங்கூர் போலீஸ் உத்தரவாதம் அளித்துள்ளது.
பத்துமலை ஸ்ரீசுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில் ஜனவரி 15-இலிருந்து போலீசார் காவல் பணியில் ஈடுபட்டிருப்பதாக சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் அப்துல் சமா மாட் கூறினார். ஜனவரி 24வரை காவல் பணி தொடரும்.
“பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான காவலர்களை அங்கு நிறுத்தி வைத்திருக்கிறோம்.
“எனவே, பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் அஞ்ச வேண்டியதில்லை”, என ஷா ஆலம் போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அப்துல் சாமா தெரிவித்தார்.
முருகன் துணை.
வெளியே பயிரை மேய்நத கதை
ஆகாமல் இருந்தால் மேல்.
இந்த மாதிரியான நேரத்திலாவது ஒரு நல்லதை செய்ய முன்வந்த காவல்துரைக்கு நன்றி.
எதை பற்றியும் கவலையும் , பயமும் வேண்டாம் ; எம் பெருமான் முருகன் இருக்கையிலே !!! வேலெடுத்து விளையாட மாட்டாரா என்ன ?
நம் போலிஸ் வீர புலிகளுக்கு பாராட்டுக்கள் $$$???? முருகன் துணை பக்தர்களுக்கு உண்டு .
கோயில் நிருவாகத்திலேயே குண்டர் கும்பல் இருக்கும் பொழுது, முருகனுக்கு ஏன் பயம்! யாமிருக்க பயன் ஏன் என்று மடராஜா சொல்லாமலா போய்விடுவார்? பாதுகாப்புக் காரணமாக எம் குடும்பத்தினரை அங்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறேன். எவ்வளவுதான் உத்திரவாதம் கொடுத்தாலும், பிரச்சனை வந்த பிறகு ஏற்படும் உயிர், பொருள் இழப்பிற்கு யாரும் நட்டயீடு கொடுக்கப் போவதில்லை. முருகனுக்கே மொட்டையும் மூன்று நாமமும் போடும் பொழுது நமக்கு போடமாட்டார்களா என்ன?
நடராஜா மகன் கைது என்று மலேசியா நண்பன் செய்தி வெளியிடுள்ளது.
ஒருவனை முப்பது நாற்பது வருசமாக ஒரே பதவியில் உட்கார வைத்தால் இதுவும் நடக்கும் இதுக்கு மேலேயும் நடக்கும் !
இதற்க்குதான் இப்பொழுது ஹிந்ட்ரப் உதய குமார் முழுமுச்சாக செயல் படுகிறார். ஆனால் அவரை தாக்கியதாக மலேசியா நண்பன் செய்தி வெளியிடிரிக்கிரார்கள்.
மிகவும் வருந்தத்தக்க ஒரு நிலை. இது போன்ற ஒரு நிகழ்வு பத்துமலையில் என்றுமே ஏற்பட்டதில்லை. எங்கிருந்தோ வந்து இங்குள்ளவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற பயமுறுத்தல்களை முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். அமைதி நிலவும் என எதிர்பார்ப்போம்.
நம்ம போலிஸ் நக்கி போலிஸ் நமக்கு முருகன் துணை போதும் இந்த போலிஸ் batu cavesil வருகின்ற பக்தர்களை மிரட்டி நஜிப் ரோச்மாஹ் பாணியில் லஞ்சம் வங்கதான் லாயக்கு