பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவரது நிலையை வலுப்படுத்திக் கொண்டிருப்பதுபோல் தோன்றினாலும் அவரைப் பதவியிலிருந்து அகற்றும் முயற்சியைக் கைவிடுவதில்லை என்பதில் உறுதியுடன் இருக்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட்.
“அதை நான் கைவிடவில்லை. ஏனென்றால் அது முக்கியமான ஒன்று.
“நஜிப்பின் ஆட்சியில் பொருளாதாரம், அரசியல், அறிவியல், தொழில்நுட்பம், அறிவு எல்லாமே வீழ்ச்சி கண்டிருக்கிறது”, என புத்ரா ஜெயாவில் மகாதிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நஜிப் தொடர்ந்து பிரதமராக இருப்பதற்காக தன் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தியதுதான் இந்த வீழ்ச்சிக்குக் காரணம்.
“செல்வாக்கைப் பெறப் பணம் பயன்படுத்தப்பட்டது.
“ரிம2.6பில்லியன் (நன்கொடை) தேர்தலில் (பாரிசான் நேசனல்) வெற்றிபெறப் பயன்படுத்தப்பட்டது என்பதை அவரே(நஜிப்) ஒப்புக்கொண்டிருக்கிறார்”, என முன்னாள் பிரதமர் மகாதிர் கூறினார்.
நீ எல்லாத்தையும் இழந்து கடைசியா அம்னோ பாருக்கு மூடு விழ செய்யாம மண்டைய போடமாட்டேன்னு நான் வாழ்த்துறேன்!!!
கைவிடாதிர்கல் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தாலாவது அதை நிறைவேட்ருங்கள் .
ஆமாம், மகாதிர் செய்த கோளாறுக்கு அவரே, போராடவேண்டி இருக்கு , இதுதான் செய்த பாவம் திருப்பி அடிக்கும் என்பார்கள் தமிழர்கள் !