அம்பிகா: என்எஸ்சி சட்டவரைவை நியாயப்படுத்த ஜகார்த்தா தாக்குதல் ‘வசதியாக’ போய் விட்டது

convenient“அரசமைப்புக்கு  விரோதமான”  தேசிய  பாதுகாப்பு  மன்ற  சட்டவரைவை  நியாயப்படுத்துவதற்கு  கடந்த  வாரம்   நிகழ்ந்த  ஜகார்த்தா  பயங்கரவாதத்  தாக்குதலைச்  சுட்டிக்காட்டுவது  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  “வசதியாக”ப்  போய்  விட்டது  என்கிறார்   வழக்குரைஞர்  மன்ற  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்.

TakNakDictator  கூட்டமைப்பின்  சார்பில்  விடுத்துள்ள  ஊடக  அறிக்கையில்  என்எஸ்சி  சட்டம்  விரிவான  அதிகாரங்களை  வழங்குவதாக  அம்பிகா  கூறினார்.

நாட்டில்  நிலவுவதாகக்  கூறப்படும்  பயங்கரவாத  நடவடிக்கைகளுக்கும்  என்எஸ்சி  சட்டவரைவு  வழங்கும்  அதிகாரத்துக்கும்  சம்பந்தமே  இல்லை  என்றாரவர்.

“என்எஸ்சி  சட்டவரைவு  அளவுக்கு  அதிகமான  அதிகாரத்தை  பிரதமருக்கும்  தேசிய  பாதுகாப்பு  மன்றத்துக்கும்  வழங்குகிறது.

“அதேபோன்ற  தாக்குதல்  இங்கு  நடக்குமானால்  நிலைமையைச்  சமாளிக்க  என்எஸ்சி  சட்டத்தைப்  பயன்படுத்திக்  கொள்ளலாம்  எனப்  பிரதமர்  கூறுவது  ஏற்கத்தக்கதல்ல.  அப்படிப்பட்ட  மிரட்டலை  ஒடுக்க  போலீசும்  நடப்பில்  உள்ள  சட்டங்களுமே  போதுமானவை”, என்று  அம்பிகா  கூறினார்.