சரவாக் ரிப்போர்ட் தலைமை செய்தி ஆசிரியர் கிளேர் ரியுகாசல்- பிரவுன் தாம் முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் கையாள் என்று கூறப்படுவதை மறுத்தார்.
Open Source Investigations (ஓஎஸ்ஐ) என்னும் இணையத்தளம் ரியுகாசல்- பிரவுன் அன்வாருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி இருந்தது.
“நான் ஒரு செய்தியாளர். அதனால் அன்வாருடனும் மற்ற அரசியல்வாதிகளுடனும் தொடர்பு வைத்திருக்கலாம். மலேசியாவில் ஊழலை எதிர்த்தும் மனித உரிமை மீறல்களை எதிர்த்தும் பிரச்சாரம் செய்திருக்கிறேன். அதில் பாதிக்கப்பட்டவர்களில் அவரும் ஒருவர்”, என்றார்.
எதிரணியினரிடமிருந்து பணம்காசு வாங்கியது இல்லை என்றும் அவர் கூறினார்.
ஒஎஸ்ஐ ஒரு முகப்பு நிறுவனமாகவும் பிரச்சாரக் கருவியாகவும் செயல்பட்டு வருகிறது என்று கூறிய ரியுகாசல், மற்ற இணையத் தளங்களில் வரும் செய்திகளை வைத்து தம்மீதும் இதர பலரின்மீது அது “பொல்லாங்கு” கூறுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது என்றார்.
“அதன் கூற்றுக்கு ஆதாரங்களைக் காண்பிப்பதில்லை ஏனென்றால் அவற்றில் பெரும்பாலாவை பொய்கள்”, என்றவர் மலேசியாகினிக்கு அனுப்பி வைத்த மின்னஞ்சலில் கூறி இருந்தார்.
நீங்கள் உண்மை தகவல் மக்களுக்கு தந்தாள் , மக்களுக்கு நீங்கள் கையால் !