நிபுணர்கள்: சட்டமன்றம் அல்லது அரசப்பேராளர் மன்றத்துக்கு மட்டுமே முக்ரிசை பதவிநீக்கும் அதிகாரம் உண்டு

mukகெடா  மந்திரி   புசார்  முக்ரிஸ்  மகாதிரைப்  பதவியிலிருந்து  வெளியேற்ற  கெடா  சட்டமன்றத்தில்  நம்பிக்கையில்லா  வாக்கெடுப்பு  கொண்டுவர  வேண்டும்   அல்லது  கெடா  அரசப்பேராளர்  மன்றம்  அதன்  அதிகாரத்தைப்  பயன்படுத்தி  அவரைப்  பதவிநீக்கம்  செய்ய  முடியும்.

மாநிலச்  சட்டமன்றக்  கூட்டம்  நடைபெற்றுக்  கொண்டிருந்தால்   சட்டமன்ற  உறுப்பினர்களின்  ஆதரவை  வைத்துத்தான்  முக்ரிசின்  நிலையைத்  தீர்மானிக்க  வேண்டும்  என  யுனிவர்சிடி  டெக்னோலோஜி  மாரா,  சட்டப்  பேராசிரியர்  ஷாட்  சலீம்  பாருகி  கூறினார்.

“அவர்  பதவியில்  இருப்பது  சட்டமன்ற  உறுப்பினர்களின்  ஆதரவைப்  பொறுத்தது. ஆதரிப்பவர்கள்  அரசுத்  தரப்பு  சட்டமன்ற  உறுப்பினர்களாக  அல்லது  சட்டமன்றத்தில்  உள்ள  எதிரணி   உறுப்பினர்களாக  இருக்கலாம்”, என்றவர்  பெர்னாமாவிடம்  தெரிவித்தார்.

ஆனால்,  இப்போது  கெடா  சட்டமன்றக்   கூட்டத்தொடர்  நடப்பில்  இல்லை.  எனவே, முகிரிசின்  பதவி  குறித்து  தீர்மானிக்கும்  அதிகாரம்,  கெடா  சுல்தான்  துவாங்கு  அப்துல்  ஹாலிம்  மு’வாட்சம்  ஷா  பேரரசராக  இருப்பதால்,  அரசப்பேராளர்  மன்றத்திடம்  உள்ளது.

“அது  என்ன  செய்யப்போகிறது  என்பதைப்  பொறுத்திருந்து  பார்ப்போம்”,  என்றார்.