குழந்தைகளை ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்யும் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என மலேசிய பொளத்தம், கிறிஸ்துவம், இந்துசமயம், சீக்கியம், தாவோயிசம் கூட்டு ஆலோசனை மன்றம் (MCCBCHST) வலியுறுத்தியுள்ளது.
“பிரச்னைக்கான அடிப்படை காரணம், அதாவது வயதுக்கு வராத சிறார்களை ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்யும் விவகாரத்துக்கு முடிவு காணப்பட வேண்டும்” என MCCBCHST ஓர் அறிக்கையில் கூறியது.
பெற்றோரில் ஒருவர் இன்னொருவருக்குத் தெரியாமல் ஒருதலைப்பட்சமாக குழந்தையை மதமாற்றம் செய்வதைச் சட்ட ரீதியில் தடுப்பது பற்றி ஆராய 2009-இல் ஒரு குழு அமைக்கப்பட்டதை அம்மன்றம் சுட்டிக்காட்டியது.
அக்குழுவில் பங்கேற்க MCCBCHST வழக்குரைஞர்களும் அழைக்கப்பட்டனர். விவகாரத்துக்குத் தீர்வு காண்பதை நோக்கி விரைவான முன்னேற்றமும் காணப்பட்டது.
ஆனால், மூன்று மாதங்களுக்குப் பின்னர், அக்குழுவுக்கு சட்டத்துறை தலைவர் தலைமையில் ஷியாரியா பிரிவு ஒன்று பொறுப்பேற்றது.
“சில கூட்டங்கள் நடந்தன. அதன் பிறகு ஒரு தேக்க நிலை. குழந்தைகளின் ஒருதலைப்பட்சமான மதமாற்ற விவகாரம் பற்றிப் பேசப்படவில்லை”, என்று அனைத்து சமய மன்றம் கூறியது.
2009-இலும் 2013-இலும் சட்டத்துறை தலைவர் அலுவலகம் முன்மொழிந்த சட்டத்திருத்தங்களும் “ஏற்கத்தக்கவையாக இல்லை” என MCCBCHST தெரிவித்தது. ஏனென்றால் அதன்பின்னரும்கூட பெற்றோரில் ஒருவர் இன்னொருவருக்குத் தெரியாமலேயே குழந்தைகளை மதமாற்றம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.
இந்த அனைத்து சமய மன்றம் ஒரு பயந்தாங்கொள்ளி
எல்லாம் தொடை நடுங்கிகள்.