பிரதமர் நஜிப் துன் ரசாக் 1எம்டிபி துணை நிறுவனம் எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்திடமிருந்து ரிம 42 மில்லியன் தம் சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதை ஒப்புக்கொண்டாரா என்பது உறுதியாக தெரியவில்லை.
முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக்கிற்கு எதிரான வழக்கு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் அவர் ஒப்புக்கொண்டதாகத்தான் தெரிகிறது.
ஆனால், நஜிப் ரிம42 மில்லியன் தம் கணக்கில் போடப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்தார் என்றுதான் அவரின் வழக்குரைஞர் ஹவாரிசாம் ஹருன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“விசாரணை முடியும்வரையில் (என் கட்சிக்காரர்) எந்தப் பதிலும் வழங்க மாட்டார்.
“ஆனாலும் உங்களுக்குப் பதில்தான் வேண்டும் என்றால் எஸ்ஆர்சி- இலிருந்து ரிம42 மில்லியன் தம் கணக்குக்கு மாற்றிவிடப்பட்டதாகக் கூறப்படுவதை என் கட்சிக்காரர் மறுக்கிறார்”, என்று ஹவாரிசாம் கூறினார்.
ஆமாம் ஒஈஉக்கொண்டுல்லாஅம் இந்த திருடன்