நஜிப் ரிம2.03 பில்லியனை சவுதி அரச குடும்பத்திடமே திருப்பிக் கொடுத்து விட்டார்

retபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  அரசியல்   நன்கொடையாக  தம்  வங்கிக்  கணக்கில்  செலுத்தப்பட்ட  ரிம2.6 பில்லியனில் ரிம2.03  பில்லியனைத்  திருப்பிக்  கொடுத்து  விட்டார்  எனச் சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  அலி  கூறினார்.

அப்பணம், கடந்த  பொதுத்  தேர்தலின்போது  பயன்படுத்திக்  கொள்ளப்படவில்லை  என்பதால்  தேர்தல்  முடிந்த  இரண்டு  மாதங்களில்  2013, ஆகஸ்டில்    சவுதி அரச குடும்பத்தினரிடமே திரும்பக்  கொடுக்கப்பட்டது.

2013  மார்ச்  22-க்கும்  ஏப்ரல்  10-க்குமிடையே  நஜிப்பின்  வங்கிக்  கணக்கில்  செலுத்தப்பட்ட  அப்பணம் “சவூதி  அரச  குடும்பம்  எவ்வித  எதிர்பார்ப்புமின்றி  அவருக்கு(நஜிப்)  கொடுத்த  தனிப்பட்ட  நன்கொடை”  என்பதைச்  சாட்சிகளும்  ஆதாரங்களும்  நிரூபிக்கின்றன  என முகம்மட்  அபாண்டி   தெரிவித்தார்.