பாண்டான் எம்பியும் பிகேஆர் உதவித் தலைவருமான ரபிஸி ரம்லி அவதூறு குற்றம் செய்திருக்கிறார் என பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
அக்குற்றத்துக்காக அவருக்கு ரிம1,800 அபராதம் விதிக்கப்பட்டது. ரிம1,800 என்பதால் அவரது எம்பி பதவி தப்பியது. அபராதம் ரிம2,000 அல்லது அதற்குமேல் போனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேர்ந்திருக்கும்.
2014-இல் தேவாலயங்களின் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்குப் பின்னணியில் சிலாங்கூர் அம்னோ இருப்பதாக ரபிஸி கூறினார் என்பதை அரசுத்தரப்பு ஐயத்துக்கிடமின்றி தெளிவாக நிரூபித்திருக்கிறது என நீதிபதி அஸ்வர்னிடா அரிபின் கூறினார்.
பண்டான் தொகுதியில் இடை தேர்தல் வந்தால் BN கிழிந்து விடும் அல்லவா ! அதன் வெளிப்பாடுதான் இந்த தீர்ப்பு !
தமிழர் நந்தா! சரியாக சொன்னீர்கள். நம் நாட்டின் நீதிமன்ற தீர்ப்புகளின் மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்பது வேதனைக்குரிய விஷயம்.It is not healthy for a developing country like Malaysia . காலம், நேரம், ஆள் பார்த்து தீர்ப்புகள் சொல்லப் படுகிறது.