கெடா அரசப் பேராளர் மன்றம் அம்மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடியில் எந்தத் தரப்பையும் ஆதரிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்புக்களே பிரச்னையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.
“கெடா அரசப் பேராளர் மன்ற உறுப்பினர்கள் கெடாவில் ஏற்பட்டுள்ள அரசியல் சர்ச்சையைக் கவனத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் உறுப்பினர்கள் எந்தத் தரப்புக்கும் ஆதரவு காட்ட மாட்டார்கள், சலுகை காட்ட மாட்டார்கள், நடுநிலைதான் வகிப்பார்கள் என்பதை அரசப் பேராளர் மன்றம் வலியுறுத்த விரும்புகிறது”, என அம்மன்றம் தெரிவித்தது.
மகாதிர் மகன் கிழிந்துபோக, வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது !
இந்த பிரச்சனை தீர்வுக்கான துருப்பு சீட்டு அரச பேராளர் மன்ற தலைவரிடம்தான் உள்ளது என்றாலும் அதனை இயக்கும சக்தி நாஜிப்பிடம் உள்ளது. இனிமேல் நாஜிப் பற்றி வாய் திறக்கமாட்டேன்
என்று மகாதீர் ஒப்புகொண்டால் முக்கிரீஸ் தலை தப்பியது ! இல்லையென்றால் ,,, அரோகாதான்.
சிறந்த வழி, கெடா மாநில ஆட்சியை கலைத்துவிட்டு,மறுதேர்தல் நடத்துவதுதான்,
இதுதான் அரசப் பேராளர் மன்றத்திற்கு ராஜ மரியாதை.