எம்ஏசிசி ‘தெளிவான’ வழக்குகளில் ஏஜி-இன் முடிவின்மீது முறையீடு செய்யக்கூடும்

bahrரிம2.6 பில்லியன்  மற்றும்  எஸ்ஆர்சி   இண்டர்நேசனல்  வழக்குகளைக்  கைவிடும்  சட்டத்துறைத்  தலைவர்  முடிவுக்கு  எதிராக  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி) முறையீடு  செய்யும்  சாத்தியம்  உள்ளது.

அவை,  “ஒளிவுமறைவற்ற  தெளிவான”  வழக்குகள்  என  ஆணையத்தின் சிறப்பு  நடவடிக்கை  இயக்குனர்  பாஹ்ரி  முகம்மட்  ஸின்   த  ஸ்டாரிடம்  கூறினார்.

அவ்வழக்குகள்  தொடர்பில்  பிரதமர்  நஜிப்  மீது  குற்றஞ்சாட்ட  ஆதாரம்  ஏதுமில்லை  எனச்  சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  அலி  நேற்று  அறிவித்திருந்தார்.

பாஹ்ரி, எஸ்ஆர்சி  விசாரணையை  முன்னின்று  நடத்திய  எம்ஏசிசி  அதிகாரி  என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த  ஆண்டில்  அவரைப்  பிரதமர்துறைக்கு இடமாற்றம்  செய்ய  ஆணை  பிறப்பிக்கப்பட்டது. ஆனால்,  அது  பின்னர்   மீட்டுக்கொள்ளப்பட்டது.