புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையத் தலைவர் முகம்மட் ஹாஷிம் அப்துல்லா பெர்சே 2.0 தலைவர் மரியா சின் அப்துல்லாவைச் சந்திக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்.
பெர்சே 2.0 எழுப்பியுள்ள விவகாரங்கள் குறித்து அதனுடன் விவாதிக்கப்போவதாக இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் முகம்மட் ஹாஷிம் கூறினார்.
“ஒரு மரியாதை வருகைக்கு ஏற்பாடு செய்து அவர்கள் அதிருப்தி கொண்டுள்ள விவகாரங்கள் பற்றி விவாதிக்கப் போகிறேன்”, என்றார்.
பெர்சே 2.0 தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல பேரணிகளை நடத்தியுள்ளது.
அண்மையில், சரவாக் மாநிலத் தேர்தலுக்கு முன்பு தேர்தல் தொகுதி எல்லைகள் திருத்தி அமைக்கப்பட்ட விதம் குறித்தும் பெர்சே அதிருப்தி தெரிவித்துள்ளது.