நஜிப்பைக் குற்றம் சாட்டும் எம்ஏசிசி-இன் பரிந்துரையை ஏஜி புறந்தள்ளினார்

chargeமலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்  (எம்ஏசிசி) பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது   குற்றம் சாட்ட வேண்டும் என்று   பரிந்துரைத்ததாகவும் சட்டத்துறைத் தலைவர்   முகம்மட் அபாண்டி அலி   அதைப் புறக்கணித்தார் என்றும்   ராய்ட்டர்ஸ்    செய்தி   ஒன்று கூறியது.

பிரதமர்மீது   நம்பிக்கை மோசடி குற்றம்   சாட்டப்படுவதற்கு ஆணையம் பரிந்துரைத்ததாய்   தகவலறிந்த   வட்டாரமொன்று   தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் கூறியது.

“குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தோம் .  ஆனால், சட்டத்துறைத் தலைவர் அதை நிராகரித்து விட்டார்”, என அவ்வட்டாரம் கூறியது.  தகவல் அளித்த வட்டாரம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.   எம்ஏசிசி-இன் புலன் விசாரணைகளில் கிடைத்த தகவல்களை வெளியிடவும் அது மறுத்து விட்டது.

இதன் தொடர்பில் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ள முயன்று அது முடியாமல் போய்விட்டது எனவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்தது