நேற்று அறிவிக்கப்பட்ட 2016 பட்ஜெட் திருத்தம் ஆயிரக்கணக்கான இளம் மலேசியர்களின் கனவுகளைச் சிதறடித்து விட்டதாக டிஏபி எம்பி ஸைரில் கீர் ஜொகாரி கூறினார்.
இந்த இளைஞர்கள் சிறந்த தேர்வு முடிவுகளைப் பெறுவதற்காக பாடுபட்டுப் படித்திருக்கிறார்கள். அரசாங்க உதவிச் சம்பளத்தைப் பெறலாம் என்று நம்பி நேரத்தையும் பணத்தையும் செலவிட்டிருக்கிறார்கள்.
அவப்பேறாக, அரசாங்கம் உதவிச் சம்பளத் திட்டத்தை 20-இலிருந்து 60 விழுக்காடுவரை குறைத்து விட்டதால் குறைந்தது 2,436 மாணவர்களாவது உதவிச் சம்பளம் பெறும் வாய்ப்பை இழப்பார்கள் என்று அந்த புக்கிட் பெண்டாரா எம்பி ஓர் அறிக்கையில் கூறினார்.
நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பலி கொடுக்காமல் தேவையற்ற மற்ற திட்டங்களை- சிறப்பு விவகாரத்துறை, தேசிய குடிமையியல் பிரிவு (பிடிஎன்), டேலண்ட்கார்ப், தேசிய சேவைப் பயிற்சித் திட்டம் போன்றவற்றில் கைவைத்திருக்கலாம் என்றாரவர்.