நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மலேசியாவுக்கு ஸ்கோர்பியன் நீர்மூழ்கிகள் விற்கப்பட்டது மீதான விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது. அந்த விசாரணையில் பிரதமர் நஜிப்புக்கு நெருக்கமான ஒருவருக்கு சட்டவிரோதமாக கமிஷன் தொகை கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது.
இந்த விசாரணையில் முதன்முதலாக குற்றஞ்சாட்டப்பட்டவர் பிரெஞ்ச் நிறுவனமான Thales-இன் அனைத்துலக துணை நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் பயோக்கோ,72.
அவர், அப்போது தற்காப்பு அமைச்சராக இருந்த “நஜிப் ரசாக்குடன் தொடர்புள்ள அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுத்தார்”, என்பது குற்றச்சாட்டு என பிரெஞ்ச் செய்தி நிறுவனமான ஏஎப்பி கூறியது.
அப்படிக் கொடுக்கப்பட்ட கமிஷனை அல்லது கையூட்டைப் பெற்றுக் கொண்டவர் அரசியல் ஆய்வாளரான அப்துல் ரசாக் பாகிண்டா என்றும் அது குறிப்பிட்டது.
“இந்தத் தருணத்துக்காகத்தான் இவ்வளவு காலம் காத்திருந்தோம்” என ஊழல் எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் சிந்தியா கேப்ரியல் தெரிவித்தார்.
“அவ்வழக்கு முன்னோக்கி நகர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது ஊக்கமளிக்கிறது. முக்கிய பிரெஞ்ச் அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
“அவர் நீதிமன்றத்தில் எதிர்வாதம் செய்ய வேண்டியிருக்கும். ஸ்கோர்பியன் நீர்மூழ்கிக் கப்பல்களின் கொள்முதல் பற்றிய விவரங்கள் எல்லாம் இனி வெளிச்சத்துக்கு வரும்.
“ரசாக் பாகிண்டாவின் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர் சாட்கியமளிக்க அழைக்கப்படுவாரா என்பது தெரியவில்லை. இனி, இவ்வழக்கு முழுமையான விசாரணைக்குச் செல்லும். மேலும் பலர் குற்றம் சாட்டப்படலாம்”.
ஸ்கோர்பியன் வழக்கை பிரெஞ்ச் நீதிமன்றத்தில் தொடுத்த அரசுசாரா நிறுவனமான சுவாராம் இதன் தொடர்பில் விரைவில் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தும் என்றும் சிந்தியா கூறினார்.
இத்தகைய செய்திகளெல்லாம், விவரங்களெல்லாம் நம் நாட்டு நாளிதழ்களில் வெளி வருமா ?
நீர்மூழ்கி கொள்முதலில் ரசாக் பாகிண்டா அவருக்குரிய கமிஷனை மட்டும்தான் பெற்றார் என்றால் “அல்தாந்துயாவின் கமிஷன்” என்னவாயிற்று ?
மலேசியாவில் அதிகாரத்திலும் பதவியிலும் உள்ள ஊழல்வாதிகளுக்கு எல்லாம் தெரியும். என்ன எல்லாம் இன மத சாயம் பூசி ஒன்றம் இல்லாமல் ஆக்கி விடுகின்றனர்– அதை ஒரு இனம் கண்டு கொள்வதே கிடையாது–இது சுதந்திர காலத்தில் இருந்து நடக்கிறது– அப்போதாவது சிறிது நீதி நியாயம் இருந்தது- அதனால் தான் அன்றைய கல்வி அமைச்சர் பதவி இழந்த கதை. அதுவும் நம்முடைய DR – SB சீனிவாசகம் சகோதரர்கள் தான் வழி நடத்தினர்.