பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குக் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் ரிம2.6 மில்லியன் பற்றிய வங்கி அறிக்கைகளை வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து பெறுவதற்கு மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்துக்கு அனுமதி அளிக்காதது ஏன் என்பதைச் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி விளக்க வேண்டும்.
அந்த அறிக்கைகளைப் பெறுவதற்கு அபாண்டியின் அனுமதி ஆணையத்துக்குத் தேவைப்பட்டது என எம்ஏசிசி நடவடிக்கைகள் மறுஆய்வு வாரிய உறுப்பினர் லிம் சீ வீ கூறினார்.
“அது, அந்த நன்கொடை ஓய்வூதிய நிதி நிறுவனத்தின் பணம் என்றும் ஏஜி அதை மூடிமறைக்கிறார் என்றும் கூறப்படும் வதந்திகளை முறியடிக்க உதவி இருக்கும்”, என லிம் மலேசியாகினிக்கு அனுப்பிவைத்த மின்னஞ்சல் ஒன்றில் கூறினார்.