மலேசிய ஊழல்தடுப்பு ஆணையமும் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலியும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகள்மீதான புலன் விசாரணை தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று டிஏபி-இன் பூச்சோங் எம்பியும் டிஏபி தேசிய சட்டப் பிரிவுத் தலைவருமான கோபிந்த் சிங் டியோ கூறினார்.
கூட்டரசு அரசமைப்பு சட்டத்துறைத் தலைவரான அபாண்டிக்கு ஒரு விசாரணையை நிறுத்தும் அதிகாரத்தைக் கொடுக்கவில்லை என்றாரவர்,
“பிரதமர் நஜிப்பின் கணக்குகள்மீதான விசாரணை தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டும். சட்டவிதி 145 (3), ஏஜிக்கு குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நிறுத்தவும் அதிகாரம் அளிக்கிறது. விசாரணையை நிறுத்தும் அதிகாரத்தைக் கொடுக்கவில்லை”, என கோபிந்த் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
தொடரும் ஆனால் தொடராது. அதிகாரத்திலும் பதவியிலும் யார் உட்கார்ந்து இருக்கின்றனர்? இந்த 58 ஆண்டுகளில் எவ்வளவு உண்மைகள் வெளி வந்திருக்கின்றன? நாம் முதல் உலக வழிமுறைக்கு வருவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகலாம் -ஆகாது.