ஸுரைடா சரவாக்கில் நுழைவதைத் தடுத்தது கோழைத்தனம்

zuridaபிகேஆர்  மகளிர்  தலைவர்  ஸுரைடா  கமருடின்  சரவாக்கில்  நுழைய  தடை விதிக்கப்பட்டிருப்பதை  “ஒரு  கோழைத்தனமான  செயல்”  என  அக்கட்சியின்  உதவித்  தலைவர்  நுருல்  இஸ்ஸா  அன்வார்  வருணித்தார்.

அட்னான்  சடேம்  சரவாக்  முதலமைச்சராக  பொறுப்பேற்றபோது  பல  சீரமைப்புகளைச்  செய்யப்போவதாக  உறுதி  கூறினார்.  ஆனால்,  இன்னமும்  “ஜனநாயகமற்ற  முடிவுகளைத்தான்”  செய்கிறார்  என்று  நுருல்   வருத்தத்துடன்  குறிப்பிட்டார்.

ஸுரைடா  நேற்று  சரவாக்  சென்றபோது   கூச்சிங்  அனைத்துலக  விமான  நிலையத்திலேயே  தடுத்து  நிறுத்தப்பட்டார். தடுத்து  நிறுத்தப்பட்டதற்குக்  காரணம்  எதுவும்  கூறப்படவில்லை.