இபிஎப் சந்தா தொகை குறைப்பைத் தொழிலாளர்கள் வரவேற்கவில்லை

epfபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  ஊழியர்  சேமநிதிக்கான  சந்தா  தொகையில்  மூன்று  விழுக்காடு(11விழுக்காட்டிலிருந்து  8 விழுக்காட்டுக்கு)  குறைக்கப்படுவதாக  அறிவித்தது  சிலருக்கு மகிழ்ச்சி  தந்திருக்கலாம்.

ஆனால்,  பலர்  அதை  வரவேற்கவில்லை. எதிர்காலம்  குறித்து  கலங்குகிறார்கள்.  எதிர்காலச்  சேமிப்பு  குறைந்து  போகிறதே  என்ற  வருத்தம் அவர்களுக்கு.

35-வயது  நோர்  ஷஸ்ரின் சாபுவான்,  சந்தா  தொகை  குறைக்கப்படுவதை  விரும்பவில்லை.  கூடுதல்  சேமிப்பைத்தான்   விரும்புகிறார்.

“ஆமாம்.  (இபிஎப் சந்தா  தொகை  குறைக்கப்படுவதால்)  கையில்  பணம்  கூடுதலாக  இருக்கலாம்.  ஆனால், பணம்  கூடுதலாக  இருந்தால்  கூடுதலாக  செலவு  செய்வோம்.

“பணத்தை  அதில்  வைத்திருப்பதே  நல்லது. அதற்குப்  ஈவுத்  தொகையாவது  கிடைக்கும்”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

வங்கி  அதிகாரியான  புத்ரியும்  இபிஎப்  சேமிப்பு  கூடுவதையே  விரும்புகிறார்.

“சந்தா  தொகையைக்  குறைத்தது  சரியல்ல; அது  11 விழுக்காடாகவே  இருக்க  வேண்டும். வேண்டுமானால் சந்தா தொகையைக்  கூட்டலாம்.  குறைக்கக்  கூடாது.

“இபிஎப்  சேமிப்பு  கூடுவதையே  நான்  விரும்புகிறேன். சந்தா  தொகை  குறையுமானால்  கூடுதல்  வருமான  வரி  கட்ட  வேண்டி  வரும்”,  என்றாரவர்.