1எம்டிபி-இலிருந்து சுமார் ரிம4 பில்லியன் சுவீஸ் வங்கிகளுக்குத் தவறான முறையில் மாற்றிவிடப்பட்டிருக்கலாம் என சுவீஸ் சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) சந்தேகப்படுகிறார்.
“சந்தேகத்துக்கிடமான முறையில் 1எம்டிபி-இன் பணம் சுவீஸ் வங்கிகளுக்கு மாற்றிவிடப்பட்டிருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இத்தகவலை மலேசிய அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்வது முக்கியம் என்று எண்ணுகிறோம்”, என சுவீஸ் ஏஜி ஓரி அறிக்கையில் தெரிவித்ததாக த வால் ஸ்ட்ரிட் ஜர்னல் கூறியது.
1எம்டிபி ஸ்வீஸ் நாட்டுச் சட்டத்தை மீறியதா என்று விசாரணை செய்வதாகவும் அதற்கு மலேசியாவின் உதவியை நாடியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
சுமார் ரிம4 பில்லியன் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றவர் ஐயுறுகிறார்.
இதற்கு எதிர்வினையாற்றிய 1எம்டிபி வெளிநாட்டுச் சட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை தன்னைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் தொடர்பு கொண்டால் ஒத்துழைக்கத் தயார் என்றும் கூறியது.
நெருப்பு இல்லாமல் புகையாது …..!
தீ பற்றியே எரிந்தாலும் ஒன்றம் நடக்காது. எல்லாம் இவங்கள் கையில் இருக்கும்போது ? might is RIGHT — பலத்தினால் பொய்யையும் உண்மையாக்கலாம்- அதுதான் நடந்து கொண்டிருக்கிறது இக்காலத்தில்.
சுயிஸ் வங்கியும் டுபகூர்தான் என்பது எங்களுக்கு தெரியும் ! பிரான்ஸ் நாடு நீர்மூழ்கி ஒப்பந்தம் என்ன ஆனது ? உங்களுக்கு சாதகமான உடன்படிக்கை இல்லை என்றால் , தாட் பட் தஞ்சாவூர்தான்