வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு லெவி உயர்த்தப்பட்டிருப்பது ‘மிகவும் ஏமாற்றமளிக்கிறது’

fwவெளிநாட்டுத்  தொழிலாளர்களுக்கான  லெவி கட்டணம்   ரிம1,250-இலிருந்து   ரிம2,500-ஆக  திடீரென  உயர்த்தப்பட்டிருப்பதற்கு  மலேசிய  பொருள்  தயாரிப்பாளர்கள்  சங்கச்  சம்மேளனம் (எப்எம்எம்)   எதிர்ப்புத்  தெரிவித்துள்ளது.

லெவியை உடனடியாக  உயர்த்துவது  ஏற்புடையதல்ல  என்று  கூறிய   எப்எம்எம்  அம்முடிவு  வர்த்தகத்தைப்  பாதித்து  சமூக-  பொருளாதார விளைவுகலையும்  உண்டுபண்ணும்  என்று  குறிப்பிட்டது.

லெவியை  இப்போதைய  விகிதத்திலேயே  வைத்திருந்து   பொருளாதாரச்  சூழல்  மேம்பட்டவுடன்  உயர்த்திருக்கலாம்.

“லெவி  இரட்டிப்பாக  உயர்த்தப்பட்டது  மிகவும்  ஏமாற்றமளிக்கிறது. முதலாளிமார்களின்  வேண்டுகோளை  அரசாங்கம்  கருத்தில்  கொள்ளவில்லை”, என  எப்எம்எம்  ஓர்  அறிக்கையில்  தெரிவித்தது.