சுவீஸ் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) 1எம்டிபி மீதான விசாரணை தொடர்பில் “நெறிமுறைகளை மீறி தப்பான தகவல்களைப் பரப்பி வருகிறார்” எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சைட் கெருவாக் குற்றம் சாட்டியிருப்பதாக பிரிட்டனின் த கார்டியன் நாளேடு கூறியது.
“ஒரு நாட்டின் உயர் அதிகாரி இன்னொரு நாட்டின் உள்விவகாரம் பற்றிப் பகிரங்கமாக பேசுவது வழக்கத்துக்கு மாறானது, நெறிமுறைகளை மீறியது. ஆனால், அதைத்தான் சுவீஸ் ஏஜி செய்திருக்கிறார்.”. 1எம்டிபி நிறுவனம் மீதான விசாரணைக்கு உதவ வேண்டும் என்று சுசீஸ் ஏஜி மைக்கல் லாவ்பர் கேட்டுக்கொண்டிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது சாலே இவ்வாறு கூறியதாக த கார்டியன் தெரிவித்தது.
சுவீஸ் ஏஜி-இன் ஊடக அறிக்கையைத் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் கண்டித்திருந்தார். லாவ்பர் பொதுவில் பேசுவதற்குமுன் அரசாங்கத்துக்கு- அரசாங்கம் என்று தொடர்புகொண்டு தகவல் தெரிவித்திருக்க வேண்டும் என்றாரவர்.
ஜாஹிட்டின் கருத்துடன் ஓத்துப்போன சாலே, லாவ்பர் முதலில் மலேசிய சட்டத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்றார்.
அங்க உன் ஜம்பம் எடுபடாது மச்சி ..