மாரா பல்கலைக்கழகம், வங்கி போன்றவற்றை அமைக்கும்

maraமஜ்லிஸ்  அமானா  ராக்யாட்(மாரா)  வங்கி   திறப்பது  உள்பட  பல்வேறு  திட்டங்களை  முன்னெடுக்கும்.

இதன்  தொடர்பில்  பேங்க்  நெகாரா  மலேசியாவுடன்  பேச்சுகள்    நடத்தப்போவதாக  புறநகர்,  வட்டார  மேம்பாட்டு  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி   யாக்கூப்  கூறினார்.

“வங்கிக்குப்  பெயரை  இன்னும்  தீர்மானிக்கவில்லை.  ஆனால்,  திட்டமிடல்  தொடங்கி  விட்டது”, என  நேற்றிரவு  சாபாவில்  தெரிவித்தார்.

மாரா,  யுனிவர்சிடி  மஜ்லிஸ்  அமானா  ரக்யாட்  (யுனிமாரா)  என்ற  பல்கலைக்கழகத்தையும்  உருவாக்கப்போவதாக  அவர்  சொன்னார். பல்கலைக்கழகத்துக்கு  மாணவர்  சேர்க்கும்  பணி  ஜூன்  மாதம்  தொடங்கும்.  தொடக்கக்  கட்டமாக  200  மாணவர்கள்  சேர்த்துக்  கொள்ளப்படுவார்கள்  என்றாரவர்.