மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தை விட்டு சற்றே விலகி இரும் பிள்ளாய் என மலாக்கா முதலமைச்சர் முகம்மட் அலி ருஸ்தமுக்கு ”தோழமை” உணர்வுடன் ஆலோசனை கூறியுள்ளார் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி,
“எம்ஏசிசியை விட்டு விடுங்கள். சில தரப்புகளிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் நீங்கள் இப்படி நடந்து கொள்வதாக மக்கள் நினைப்பார்கள்.
“பேர் வாங்க வேண்டுமென்றால் ஏழைகளுக்காக, மலாய்க்காரர்கள் அல்லது பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுங்கள்”, என இப்ராகிம் அலி கூறினார்.
எம்ஏசிசி அதன் சிறப்பு நடவடிக்கை இயக்குனர் முகம்மட் பாஹ்ரி ஸின்னுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகம்மட் அலி கூறியதற்கு எதிர்வினையாக இப்ராகிம் இவ்வாறு கூறினார்.
ரொம்ப நாலா ஆள காணோம் தவளை தன்னுடைய நாற்ற வாயை திறந்து விட்டது !!!!!!