கைருடின் ஏஜிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல்

dinமுன்னாள் அம்னோ  பத்து  கவான்  துணைத் தலைவரான  கைருடின்  அபு  ஹாசான், சட்டத்துறைத்  தலைவராக  முகம்மட்  அபாண்டி  அலி  நியமிக்கப்பட்டதைச்  செல்லாது  என்று  அறிவிக்கக்  கோரி  நீதிமன்றத்தில்  மனு  தாக்கல்  செய்துள்ளார்.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  சம்பந்தப்பட்ட  இரண்டு   வழக்குகளைக்  கைவிட்ட  அபாண்டியின்  முடிவை  மறு  ஆய்வு  செய்யக்  கோரி  முன்னாள்  சட்ட  அமைச்சர்  ஜைட்  இப்ராகிம்  மனு  தாக்கல்  செய்ததை  அடுத்து  கைருடின்  இப்படி  ஒரு  மனுவைத்  தாக்கல்  செய்துள்ளார்.

கைருடின்  தன்  மனுவில்  அபாண்டி  முன்பு  ஏஜி-ஆக இருந்த  அப்துல்  கனி  பட்டேய்ல்  சட்டவிரோதமான  முறையில்   பதவியிலிருந்து  அகற்றப்பட்டார்  என்று  குறிப்பிட்டிருந்தார்.

“கனியை  அகற்றியது  சட்டத்துக்குப்  புறம்பானது  என்றால்  அபாண்டி  ஏஜி-ஆக  நியமிக்கப்பட்டதும்  செல்லாது”,என  அவரது  மனு  கூறியது.