தொழிலாளர் சேம நிதி (இபிஎப்), 2015-க்கு ஒரு நியாயயமான லாப ஈவை வழங்கும் என இபிஎப் துணைத் தலைமை செயல் அதிகாரி(முதலீடு) முகம்மட் நாசிர் அப்துல் லத்திப் கூறுகிறார்.
ஆனால், எத்தனை விழுக்காடு லாப ஈவை எதிர்பார்க்கலாம் என்று வினவியதற்கு அவரிடம் பதிலில்லை.
சீனப் புத்தாண்டுக்குப் பின்னர்தான் அது அறிவிக்கப்படும் என இன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இபிஎப் இதற்குமுன்னர், 2014-இல் 6.75 விழுக்காட்டையும் 2013-இல் 6.35 விழுக்காட்டையும் லாப ஈவாக வழங்கியுள்ளது.