அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பாகிண்டா ஸ்கோர்பியன் நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதலில் 30 மில்லியன் ஈரோக்கள் (ரிம137 மில்லியன்) பெற்றதை ஒப்புக்கொண்டார். ஆனால், அப்பணம் பிரெஞ்ச் நிறுவனமான தேல்ஸின் சார்பில் அரசாங்க அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுக்கப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது என்று கூறப்படுவதை மறுத்தார்.
“நான் வேலையை முடித்துக் கொடுத்தேன். அதற்குப் பணம் கொடுத்தார்கள்.
“நான் எந்த அதிகாரிக்கும் பணம் கொடுக்கவில்லை”, என்று ரசாக் பாகிண்டா கூறியதாக த பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்தது.
2002-இல், மலேசியா 2 ஸ்கோர்பியன் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கியபோது நஜிப் அப்துல் ரசாக் துணைப் பிரதமராகவும் தற்காப்பு அமைச்சராகவும் இருந்தார்.
தேல்ஸ் இண்டர்நேசனல் ஏசியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பெர்னார்ட் பயோக்கோ “நஜிப் ரசாக்குடன் தொடர்புள்ள அரசாங்க அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுத்ததாக”க் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதன் தொடர்பில் ரசாக் பாகிண்டா கருத்துரைத்தார்.
பயோக்கா-வின் வழக்குரைஞர், தம் கட்சிக்காரர் பாகிண்டாவுக்குப் பணம் கொடுத்ததை ஒப்புக்கொள்கிறார் என்றும் அது அவருடைய தரகு வேலைக்காகக் கொடுக்கப்பட்ட பணம் என்றும் குறிப்பிட்டார். ஆனால், அதை அரசாங்க அதிகாரிகளுக்குக் கையூட்டுக் கொடுப்பதற்கான பணம் என்று மாற்றிச் சொல்லி அரசுதரப்பு வழக்குரைஞர்கள் “செப்பிடு வித்தை” ஆடுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
“அமைச்சர் பணம் வாங்கியதாக அவர்கள் சந்தேகிக்கிறார்கள். ஆனால், அதை நிரூபிக்க அவர்களிடம் ஆதாரம் இல்லை”, என்றார்.
137 மில்லியன் — எதற்கு? ஒன்ற்மே செய்யாமல் கூட்டி கொடுத்ததற்கு.
இவனுக்கு நீர்மூழ்கியைபற்றி என்ன தெரியும்? இது போன்று அக்காலத்தில் இருந்து நடந்து கொண்டு தானே இருக்கிறது. எப்படி மலாய்க்காரன் பணக்காரனாவது? 1957ல் இவங்களின் நிலை என்ன ? இப்போது எப்படி இவ்வளவு பணம் புரளுது.? இதை எல்லாம் நான் வேலை செய்ய ஆரம்பித்த நாட்களிலேயே அறிந்து கொண்டேன். உண்மையை பற்றி யாருக்கு அக்கறை? பணத்திலும் அதிகாரத்திலும் புரளுபவர்களுக்கு இதைப்பற்றி எல்லாம் அக்கறை கிடையாது. லீ குவான் இயு சிங்கபூருக்கு செய்ததில் 10% இந்த நாதாரிகள் இந்த நாட்டுக்கு செய்திருந்தால் இந்த நாட்டில் அமைதியும் செழிப்பும் இப்போது இருப்பதை விட அதிகமாகவே இருந்திருக்கும்.
அரசியலில் இதுவெல்லாம் சகஜம் அப்பா
அரசியலில் இதுவெல்லாம் சகஜம் என்று கூறி “கையூட்டை” இப்படி
அப்படி என்று வாங்குவார்களாம், “கையூட்டை” வாங்குபவர்கள் அரசாங்க பதவியில் உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு மரியாதை கொடுக்குணுமாம், இறுதியில் “கையூட்டை” – “நன்கொடை” என பல்டி அடிப்பார்களாம், மக்கள் அதை ஏற்று கொள்ளனுமாம். என்னடா கருமம் இது !
சுத்துங்கடா
இன்னும் நல்லா நிறைய பூவை
காதுல சுத்துங்கடா