சவூதி வெளியுறவு அமைச்சர் அடெல் அல்-ஜூபிர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்கில் இருந்த ரிம2.6பில்லியன் ஓர் அரசியல் நன்கொடையாக இருக்க முடியாது என்றும் அது சவூதி அரசாங்கத்திடமிருந்து வந்திருக்க வழியில்லை என்றும் நினைக்கிறார்.
அது “முதலீடு” செய்வதற்கு அனுப்பப்பட்ட பணமாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
“சவூதி குடிமகன் ஒருவர் அதை அனுப்பியிருக்கலாம் மலேசியாவில் முதலீடு செய்வதற்காக”, என அல்-ஜூபிர் தெரிவித்ததாக நியு யோர்க் டைம்ஸ் கூறியது.
அதே வேளையில், அப்பணம் மாற்றிவிடப்பட்டதில் குற்றம் எதுவும் நிகழ்திருக்கவில்லை என்று மலேசிய சட்டத்துறைத் தலைவர் அறிவித்திருப்பதையும் தாம் ஒப்புக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இரண்டு வட்டாரங்கள் அப்பணம் ஒரு நன்கொடை அல்ல என்று தெரிவித்ததாகவும் அச்செய்தி கூறிற்று.
அது “தொழிலுக்காக போடப்பட்டது” என்று அவை கூறிக்கொண்டன.
நேற்று – “கையூட்டு” ; இன்று – “நன்கொடை” ; நாளை- “முதலீடு”
அடேங்கப்பா ! என்னமா சிந்திக்கிறாங்க !
நஜிப்பின் ரிம2.6 பில்லியன் ஒரு நன்கொடையாக இருக்க முடியாது என்கிறார் சவூதி அமைச்சர் // அல்தாந்தூயா , mh 370 கதையும் ஒன்றுதான் !
ஐயையோ “1-MALAYSIA” நல்ல பாய்ண்டா சொல்றீங்களே! நேற்று-“கையூட்டு, இன்று-“நன்கொடை”, நாளை-“முதலீடு”, நாளை மறுநாள்- [கொள்ளையடித்த பணத்தை,அனைவரும்] “பங்கீடு”
திருட்டு பணத்தில் அரசியல் நடத்தும் பிரதமர்
ஒற்றை மலேசியா தொடர்ந்து நடத்துவதை மக்கள் விடக்கூடாது
பணம் தான் திரும்ப அனுப்ப பட்டுவிட்டதே பிறகு எப்படி பங்கீடு? க க
kaaaaaaaaaaaaaaaaa. அப்படினா பணம் ??????????????????????வா?
………….பட்டாசு வெடித்தான் உண்மை சொல்வான் போலும்
ஹா ஹா ஹா – இதற்க்கு மேல் என்ன சொல்ல?
கவுண்டமணி செந்தில் காமெடி கதைபோல் இருகின்றது இவர்களது அறிக்கை.