சாலை விபத்தில் புலி பலியானது

tigerஇன்று  அதிகாலையில்  கெமாமான்  அருகில்  கிழக்குக்  கரை   விரைவுச்  சாலை  2-இல் (எல்பிடி2)  புலி  ஒன்று  சாலை  விபத்தில்  சிக்கி  மாண்டது.

பின்னிரவு  மணி  ஒன்று  வாக்கில்  புலி   சாலையைக்  கடக்க  முயன்றபோது  கோலாலும்பூரிலிருந்து  கோலா  திரெங்கானு  சென்று  கொண்டிருந்த  ஒரு  எம்பிவி  வாகனத்தால்  அது  மோதித் தள்ளப்பட்டிருக்கலாம்  எனக்  கருதப்படுகிறது.

விபத்தை  உறுதிப்படுத்திய  மாநில  பொது  ஒழுங்கு,  போக்குவரத்து  தலைவர்  சுப்பிரெண்டெண்ட் கமாலுடின்  முகம்மட்,  வாகனத்தில்  இருந்த  ஓட்டுனரும்  மூன்று  பயணிகளும்  காயம்  ஏதுமின்றித் தப்பினார்கள்  என்றார்.

இரவு  நேரத்தில்  நெடுஞ்சாலைகளில்  பயணிப்போர்  காட்டு  விலங்குகள்  சாலைகளில்  திரிகின்றனவா  என்பதைக்  கவனித்து  ஊர்திகளைச்  செலுத்த  வேண்டும்  என்று  அவர்  கேட்டுக்கொண்டார்.

“மான்கள்,  டேபிர்கள்,  காட்டுப் பன்றிகள்,  ஆடுகள்,,  மாடுகள்,எருமைகள்  போன்றவை  சாலைகளில்  திரியலாம்”, என்றவர்  பெர்னாவிடம்  தெரிவித்தார்.