இபிஎப் லாப ஈவு: 7விழுக்காடு வழங்க: ஃபோம்கா கோரிக்கை

epfஊழியர்  சேம  நிதி அதன்  சந்தாதாரர்களுக்கு  ஏழு  விழுக்காடு    லாப  ஈவை  அறிவிக்க  வேண்டும்  என  மலேசிய  பயனீட்டாளர்  சங்கச்  சம்மேளனம்(ஃபோம்கா)   வலியுறுத்தியுள்ளது.

உயர்ந்துவரும்  வாழ்க்கைச்  செலவு,  பொருள்,  சேவை  வரியின்  அமலாக்கம்,  ரிங்கிட்டின்  வீழ்ச்சி, தொழில்கள்  தட்டுத்  தடுமாறிக்  கொண்டிருக்கும்  நிலை  ஆகியவற்றைக்  கருத்தில்  கொண்டு  அரசாங்கம்  மக்களிடம்   கருணை  காட்ட  வேண்டும்  என  ஃபோம்கா  தலைவர்  என். மாரிமுத்து  கேட்டுக்கொண்டார்.

இபிஎப்,  லாப  ஈவாக  2014-இல் 6.75  விழுக்காட்டையும்  2013-இல்  6.35  விழுக்காட்டையும்  வழங்கியது.

மிக  அதிகமான லாப  ஈவு  வழங்கப்பட்டது  1999-இல். 6.84 விழுக்காடு  வழங்கப்பட்டது.