சிலாங்கூரில் பிகேஆரும் டிஏபி-யும் தங்கள் தொகுதிகளை அமானாவுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்று சிலாங்கூர் பாஸ் ஆணையர் இஸ்கண்டர் அப் சமத் கூறினார்.
அதனால்தான் அமானா, சிலாங்கூரில் பாஸ் போட்டியிடும் இடங்களில் பாஸுக்கு எதிராக போட்டியிட விரும்புகிறது என்றாரவர்.
“அமானா எதற்காக பாஸ் தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. பிகேஆரிடமும் டிஏபி-யிடமும் இடமளிக்குமாறு அது கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. ஆனால், இரண்டுமே அதை நிராகரித்து விட்டன.
“இடத்துக்காக கெஞ்சிய அமானாவை அவை சிறுமைப்படுத்தியுள்ளன”, என்றும் இஸ்கண்டர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“ஹராபான் பங்காளிக் கட்சிகளால் அவர்கள் இழிவுபடுத்தப்பட்டதை அறிய வருத்தமாக இருக்கிறது”, என்றும் அவர் சொன்னார்.
சிலாங்கூர் அமானா, சிலாங்கூரில் பாஸ் போட்டியிடும் இடங்களில் அதை எதிர்த்துக் களமிறங்கப் போவதாக சினார் ஹரியானில் வெளிவந்துள்ள செய்திக்கு எதிர்வினையாக இஸ்கண்டர் இவ்வாறு கூறினார்.
பாஸ் கட்சியையாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம். அமானா கட்சி உருப்படியில்லாத புதிய மொந்தை. பி.கே.ஆறும், டி.எ.பி.யும் தனித்தே போட்டியிடுவது நல்லது.