பார்டி அமானா நெகாரா, பாஸ் களமிறங்கும் இடங்களில் எல்லாம் போட்டியிட முடிவு செய்துள்ளது என்றால் அந்த இடங்கள் அம்னோவின் கைக்குப் போய்விடக் கூடாதே என்ற அக்கறைதான் காரணமே தவிர, அதற்கு பிகேஆரும் டிஏபி-யும் வேறு இடங்களைக் கொடுக்காதது காரணமல்ல.
இதனைத் தெரிவித்த சிலாங்கூர் அமானா இளைஞர் தலைவர் அப்பாஸ் அஸ்மி, பிகேஆரும் டிஏபியும் அவற்றின் இடங்களைக் கொடுக்க மறுத்து விட்டதால்தான் அமானா, பாஸின் இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது என சிலாங்கூர் பாஸ் ஆணையர் இஸ்கண்டர் அப்துல் சமட் கூறியிருப்பதை மறுத்தார்.
“பிகேஆரும் டிஏபியும் நிராகரித்து விட்டதால்தான் அமானா பாஸ் போட்டியிடும் இடங்களில் போட்டியிடுகிறது என்று சிலாங்கூர் பாஸ் ஆணையர் கூறியிருப்பதற்கு ஆதாரமில்லை”. என அப்பாஸ் குறிப்பிட்டார்.
“அந்த இடங்கள் அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ/பிஎன் கைக்குப் போய்விடலாம் என்று அஞ்சுகிறோம். அதனால்தான் பாஸின் இடங்களை அமானா கைப்பற்ற நினைக்கிறது”, என்றார்.
ம.சீ.ச. போட்டியிடும் இடங்கள் அனைத்திலும், 95% சீனர் ஆதிக்கத்தில் உள்ள டி.எ.பி. போட்டியிடுகிறது. அதேபோன்று, இஸ்லாமிய கொள்கைகளை பறைசாற்றும் பாஸ் கட்சியை எதிர்த்து, அதே கொள்கையுடைய அமானா கட்சி களமிறங்குவதும் நியாயமே.
அமானா கட்சி பாஸ் இடத்தில் போட்டியிடுவதுதானே முறை. அங்கிருந்து நீக்கப்பட்டவர்கள்தானே இன்று அவரிடமே மோத வேண்டிய நிலை. இதில் என்ன பரிவு பாசம் வேண்டிக் கிடக்கு.
சரியான முடிவு பலே பலே !
சரியான முடிவு தான்
சரியான முடிவு mat sabu வாக்கு தவறாத அரசியல்வாதி நஜிப் கொடுத்த பணதிக்கு விலைபோகாத ஒரு அரசியல்வாதி அதே நம்ம MIC யா கொஞ்ச்ம் நினைத்து பாருங்கள் இந்நேரம் நாக்கு தொங்கப்போட்டு நக்கி கிட்டு இருந்திருப்பனுங்க்கோ ஒரு மனிதனுக்கு மக்களிடம் கொடுத்த வாக்கு முக்கியம் அது hadi and pas MIC MCA UMNO IPF NALLA PAMBU KATCHI டோன்ட் have எனலாம்