பொதுக் கணக்குக்குழு, 1எம்டிபி விசாரணைக்காக மேலும் சாட்சிகளை அழைக்கப்போவதில்லை. அதனிடம் போதுமான தகவல்கள் உள்ளன என்பதால் மேலும் சாட்சிகளை விசாரிப்பது “தேவையற்றது”. அது அறிக்கை தயாரிக்கப்படுவதைத் “தாமதப்படுத்தி விடும்”.
“நான் ஏற்கனவே அறிவித்ததுபோல் 1எம்டிபி நிர்வாகம் பற்றி பிப்ரவரி 11-இலும் 12-இலும் சாட்சியம் அளிக்கப்போகும் (முன்னாள் தலைவர்( பக்கே சாலே-யும் (முன்னாள் தலைமை செயல் அதிகாரி) ஷாரோல் அஸ்ராலும்தான் கடைசி சாட்சிகளாவர்”, என பிஏசி தலைவர் ஹசன் அரிபின் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
2015 மே தொடங்கி நடைபெற்றுவரும் விசாரணைகளில் போதுமான தகவல்கள் திரட்டப்பட்டிருப்பதாகவும் அவற்றைக் கொண்டு தெளிவான, நியாயமான முடிவுக்கு வர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதுக்கு விசாரணை? விசாரணை செய்யாமலேயே இருந்திருக்கலாமே. மக்கள் வரிப்பணமாவது மிச்சப் பட்டிருக்கும்.