தீபா: என் மகனை இழந்தேன், சட்டங்கள் மாற வேண்டும்

deepaமகனைப்  பராமரிக்கும்  உரிமையை  இழந்த  எஸ்.தீபா  இதன்  பிறகும்  யாரும்  இப்படிப்பட்ட  விவகாரத்தால்  பாதிக்கப்படக்  கூடாது   என்றார்.

“இப்படிப்பட்ட  (சிவில்  திருமணம் சம்பந்தப்பட்ட) வழக்குகளை  விசாரிக்கும்  உரிமை  சிவில்  நீதிமன்றங்களுக்கு  உண்டு  என  இன்று (கூட்டரசு  நீதிமன்றத்தில்)  தீர்ப்பளிக்கப்பட்ட  போதிலும்  நான்  என்  மகனை  இழந்து  விட்டேன்.

“மலேசியா  மாற  வேண்டும். தனித்து  வாழும்  தாயார்களுக்காக  சட்டங்களும்  மாற  வேண்டும். என்னுடைய  வழக்கே  கடைசி  வழக்காக  இருக்க  வேண்டும்”, எனப்  பாதிக்கப்பட்ட  அந்தத்  தாயார்  உருக்கத்துடன் கூறினார்.

தீபா  இன்று புத்ரா ஜெயாவில்,  கூட்டரசு  நீதிமன்றம்  அவரின்  மகனைப்  பாராமரிக்கும்  உரிமையை  அவரின்  முன்னாள்  கணவர்  இஸ்வான்  அப்துல்லா(என்.வீரன்)விடமும்  மகளைப்  பராமரிக்கும்  உரிமையை  அவரிடமும்  ஒப்படைத்துத்  தீர்ப்பளித்ததை  அடுத்து  செய்தியாளர்களிடம்  பேசினார்.

தீர்ப்பளிப்பதற்குமுன்  ஐவர் அடங்கிய  நீதிபதிகள்  குழு,  பிள்ளைகள்  இருவரிடமும்  பேசியது.

தீபாவின்  சம்மதம்  கேட்காமலேயே அவரின்  முன்னாள்  கணவர்  பிள்ளைகள   இஸ்லாத்துக்கு  மதம்  மாற்றியதை  அடுத்து தீபாவின்  நீதிமன்றப்  போராட்டம்  தொடங்கியது.