ஊழலையும் வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டும் போக்கையும் எதிர்க்கும் மையம்(சி4). சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி அதிகாரத்துவ காப்புச் சட்ட(ஓஎஸ்ஏ) த்துக்குத் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் எனப் பரிந்துரைத்திருப்பதை வரவேற்கவில்லை.
அதை, “அரசாங்கத்தின் அசிங்கமான இரகசியங்களை மக்கள் கண்ணில் படாமல் மூடிமறைக்கும் வெட்கங்கெட்ட செயல்” என சி4 நிறுவன இயக்குனர் சிந்தியா கேப்ரியல் வருணித்தார்.
ஓஎஸ்ஏ தேசியப் பாதுகாப்புக்கு அரணாக விளங்கும் ஒரு கருவி என்ற நிலை இப்போது இல்லை என சிந்தியா இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“ஊழலை மூடிமறைக்கும் கேடயமாக, விளங்கும் அது, தகவல் அளிப்போரைத் தண்டிக்கிறது, தண்டனை பயமின்றிச் செயல்படும் கலாச்சாரம் உருவாகவும் திருட்டுத்தனமிக்க அரசியல் தலைமை உருவாகவும் துணை போகிறது”, என்றாரவர்.
அரசியல்வாதி தவறான முறையில் மக்களை வழிநடத்திச்செல்ல முனைவாராயின் அவரை திருத்த சட்டம் வேண்டும்,தண்டிக்கவும் சட்டத்தில் திருத்தும் செய்ய வேண்டும்.அதைவிடுத்து சட்டத்தை கடுமையாய் ஆக்க வேண்டும் என்றெல்லம் முயற்சி செய்வது வரவேர்ககூடிய விசயமில்லை.
என்னத்தை கொண்டுவந்தாலும் ஒன்றும் நடக்காது. 58 ஆண்டுகளில் எத்தனை முறை இந்த ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கின்றனர்? சில கண்ணாம்பூச்சி ஆட்டங்கள் அரங்கேற்றம் கண்டு திரையில் மறைக்கப்பட்டு விடும். அது தானே நடக்கின்றது.
எல்லாம் ஆட்சியை கால வரை இன்றி கையில் வைத்துக்கொள்ளவே