இஸ்வான் அப்துல்லாவுக்கு அவரின் மகனைப் பராமரிக்கும் உரிமையைக் கொடுக்கும் கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு அபாயகரமான முன்மாதிரியாகும்.
தந்தையுடன் தங்கி இருந்தான் என்பதற்காக எட்டு-வயது சிறுவனை இஸ்வானின் பொறுப்பிலேயே விடுவது தப்பான முடிவாகும் என கூலாய் எம்பி தியோ நை சிங் கூறினார்.
இஸ்வானும் அவரின் முன்னாள் மனைவி எஸ்.தீபாவும் இந்து முறைப்படி 2003-இல் திருமணம் செய்து கொண்டனர்.
2011-இல் மனைவியிடம் மணவிலக்கு பெற்ற இஸ்வான் இஸ்லாத்துக்கு மதமாறியதுடன் அவர்களின் பிள்ளைகள் இருவரையும் இஸ்லாத்துக்கு மதமாற்றினார்.
தீபா, 2014-இல் சிரம்பான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பிள்ளைகளைப் பராமரிக்கும் உரிமையைப் பெற்றார். உயர் நீதிமன்றத் தீர்ப்பை முறையீட்டு நீதிமன்றமும் கடந்த ஆண்டு மே23-இல் உறுதிப்படுத்தியது.
ஆனால், சிரம்பான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய இரண்டாவது நாள் இஸ்வான் அப்போது 6-வயதான மகனைக் கடத்திச் சென்றார்.
இப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பார்த்தால் குழந்தையைப் பராமரிக்கும் உரிமையை இழந்த பெற்றோரில் ஒருவர், பிள்ளையைக் கடத்திச் சென்று சில ஆண்டுகளுக்கு ஒளிந்து வாழலாம் என்பதை தியோ சுட்டிக்காட்டினார்.
“பிறகு நீதிமன்றம் வந்து. பிள்ளை தன்னுடன் இருக்க விரும்புகிறது என்று காரணம்காட்டி முந்தைய தீர்ப்பை மாற்றுவதற்கு மனு செய்து கொள்ளலாம் என்றாகிறது.
“இது அபாயகரமான முன்மாதிரி”, என்றாரவர்.
நான் இந்த மலாய்க்கார நீதிபதிகளை(அம்னோ குஞ்சு) நம்பவே மாட்டேன். 80 களில் இருந்து எத்தனை குளறுபடிகள் ஊழல்கள்? ஒரு வக்கீலே நீதி தீர்ப்பு எழுதியது நினைவில் இருக்கும்– இது எல்லாம் தெரிந்தவை–தெரியாதது?
பிள்ளை கடத்தியவனை ஏன் சட்டம் தண்டிக்கவில்லை,
?
முன்பு நீதிமன்ற தீர்ப்பை புறக்கனிதவனுக்கு தண்டனை இல்லையே ?
இந்த தீர்ப்பை வரபேற்பு தெரிவித்துள்ளனர் முள்ளமாரி மந்திரி சுப்ரமொனிய,சிவராஜா,மகளிர் தலைவி மோகன அரிசந்திர புத்திசாலிகள்.சமுதாயத்திற்கு கிடைத்த மேதாவி அறிவாளிகள் இவர்கள்.
நான் சொன்னது விளங்க வில்லையா?
தாயிடம் பிள்ளைகள் வளரனும் என்ற நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து பிள்ளையை கடத்திய கயவனுக்கு தண்டனை இல்லை, தாயின் அனுமதி இன்றி பிள்ளைகளை மதம் மாற்றிய மூடனுக்கு தண்டனை இல்லை. இங்கு அதிகாரப்புர்வமாக இஸ்லாம் நாடாக அக்கீகரிக்கவில்லை என்றாலும் நடக்கும் அக்கப்போருக்கெல்லாம் மதத்தை முன் நிறுத்தியே எல்லா அநியாயமும் அக்கிரமும் நடந்தது கொண்டிருக்கிறது. நீதிமன்றம் அரசின் கைப்பாவை ஆகி வெகுகாலம் கடந்து விட்டது. நாம் அனைவரும் ஆத்துலே ஒரு காலும் செத்துலே ஒரு காலும் வைத்த காலம் முடிவுறட்டும். அரசை மாற்றி அமைப்போம்.