முன்னாள் போலீஸ் அதிரடிப் படைவீரர் சிருல் அஸ்ஹார் உமர், மங்கோலிய பெண் அல்டான்துன்யா ஷாரீபுவின் கொலையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் தொடர்புண்டு என்று கூறுவதற்குக் கையூட்டு கொடுக்கவும் நெருக்குதல் கொடுக்கவும் முனைந்தவர்களின் பெயர்களை வெளியிட்டிருக்கிறாராம்.
அவர்களைப் பற்றி சிருல் ஒரு காணொளியில் தெரிவித்தார் என்றும் காணொளி தன்வசம் இருப்பதாகவும் ஒரு வட்டாரம் தெரிவித்தது.
அவர்களின் பெயர்களைத் தெரிவிக்க அவ்வட்டாரம் மறுத்து விட்டது. அது சிருலை ஆஸ்திரேலியாவின் வில்லாவூட் குடிநுழைவு தடுப்பு மையத்தில் சந்தித்துப் பேசியதாம்.
“அவர்களின் பெயர்களை (இப்போதைக்கு) தெரிவிக்க இயலாது. ஆனால், சில பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
“சிலர் நேரடியாக அவரை அணுகி இருக்கிறார்கள் மற்றவர்கள் உதவியாளர்கள் மூலமாக அல்லது முகவர்கள் மூலமாக அணுகியுள்ளனர்.
“காணொளி விரைவில் வெளியாகும்”, என்று அவ்வட்டாரம் தெரிவித்தது.
டேய் நாயே நீ ஏன் கொலை செய்தாய் யார் சொல்லி அதை செய்தாய் முதலில் அதற்க்கு பதில் சொல். நீயே கூலிக்கு மாரடித்த கொலைகாரன் நீ கொலை கொள்ளை செய்தவனுக்கு பரிந்து பேச தகுதியற்றவன் ,
ஜெயா உங்கள் கருத்து அருமை