AmBank நிறுவனர் கொலையில் டெக்சி ஓட்டுனர் விடுதலை

ambAmBank நிறுவனர்  உசேன்  நஜாடி-இன்  கொலையாளி  என்று  சந்தேகிக்கப்படும்  நபரை  தன்  டெக்சியில்  ஏற்றிச்  சென்றதாகக்  குற்றஞ்சாப்பட்டிருந்த  டெக்சி  ஓட்டுனரை  முறையீட்டு  நீதிமன்றம்  இன்று  விடுவித்தது.

தன்மீதான   குற்றஞ்சாட்டுக்கும்  தீர்ப்புக்கும்  எதிராக   சியு  சியாங்  சீ  செய்திருந்த  மேல்முறையீட்டை  நீதிமன்றம்  ஏற்றுக்கொண்டது.

தன்மீதான  குற்றச்சாட்டு  நிரூபிக்கப்படவில்லை  என்ற  சியுவின் எதிர்வாதத்தை  ஒப்புக்கொள்வதாக  மேல்முறையீட்டு  நீதிமன்ற  தலைவர்  நீதிபதி  முகம்மட்  ரவூஸ்  ஷரீப்  கூறினார்.

பிஸ்டல்,  துப்பாக்கி  தோட்டாக்கள்  ஆகியவற்றை  வைத்திருந்ததற்காக   விதிக்கப்பட்ட  14ஆண்டுச்  சிறைத்தண்டனைக்கும்  ஆறு  பிரம்படிக்கும்  எதிராக  சியு  மேல்முறையீடு  செய்திருந்தார்.

2013, ஜூலை  29-இல்,  கோலாலும்பூர்  குவான்  இன்  ஆலயத்திலிருந்து  வெளியில்  வந்தபோது  ஹுசேன்,76,  சுட்டுக் கொல்லப்பட்டார்.  அவரின்  மனைவி  கடுமையாகக்  காயமடைந்தார்.

அவரைச்  சுட்டுக்  கொன்ற  கொங்  சுவீ  குவானுக்கு  2014-இல்  மரண  தண்டனை  விதிக்கப்பட்டது.