பொதுக் கணக்குக்குழு(பிஏசி)த் தலைவர் ஹசான் அரிபின், ஆடம்பர பிரியரான தொழில் அதிபர் லவ் தேக் ஜோ-வை நாடாளுமன்றக் குழுவின் விசாரணைக்கு அழைக்க வேண்டும். இல்லை என்றால் பதவி விலகுவதே நல்லது.
“1எம்டிபி பற்றிய விசாரணைக்கு வருமாறு அவரை அழைக்கும் துணிச்சல் இல்லை என்றால் ஹசான் பிஏசி தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்”, என டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் ஓர் அறிக்கையில் கூறினார்.
லவ்-வை விசாரணைக்கு அழைப்பதென பிஏசி ஏற்கனவே முடிவு செய்திருந்தது. 1எம்டிபி முறைகேடு பற்றி சாட்சியமளிக்க லவ் அழைக்கப்படுவார் என ஹசானுக்கு முன் பிஏசி தலைவராக இருந்த நூர் ஜஸ்லான் முகம்மட் அறிவித்திருந்தார்.
நூர் ஜஸ்லானின் முடிவு ஏன் மாற்றப்பட்டது என்பதற்கு ஹசான் இதுவரை நியாயமான விளக்கம் அளிக்கவில்லை. அவரது விளக்கதுக்காக பொதுமக்கள் இன்னும் காத்திருக்கிறார்கள் என லிம் கூறினார்.
இவனெல்லாம் உண்மையான வழியில் பதவிக்கு வந்திருந்தேயானால் புரியும் தன்னுடைய கடமைகளைப்பற்றி– பேருக்காக உட்கார்ந்து தின்னும் ஈன ஜென்மங்கள் — எப்படி இவனால் என்ன செய்ய முடியும்? வெறும் பேச்சுதான்.