மற்ற தேச நிந்தனைக் குற்றச்சாட்டையும் கைவிடுவீர்: அரசாங்கத்துக்கு வலியுறுத்து

g25அரசாங்கம்,  மலாயாப்  பல்கலைக்கழக  விரிவுரையாளர்  அஸ்மி  ஷாரோமுக்கு  எதிரான  தேச  நிந்தனைக்  குற்றச்சாட்டைக்   கைவிட்டதைப்போல்  மற்றவர்களுக்கு  எதிரான  தேச  நிந்தனைக் குற்றச்சாட்டுகளையும்  கைவிட  வேண்டும்  எனக்  கேட்டுக்  கொள்ளப்பட்டுள்ளது.

“மற்றவர்கள்மீதான   குற்றச்சாட்டுகளும்  மறு ஆய்வு  செய்யப்பட்டு கைவிடப்பட  வேண்டும்.

“தேச  நிந்தனைச்  சட்டத்தை  இரத்துச்  செய்ய  வேண்டும்  என்றும்  கேட்டுக்  கொள்கிறோம்”,  என  மலாய்ச்  சான்றோர்களைக்  கொண்ட  ஜி-25  ஓர்  அறிக்கையில்  கூறியது.

காலனித்துவ  காலச்  சட்டமான தேச  நிந்தனைச்  சட்டம்  “வழக்கொழிந்த”  சட்டமாகி  விட்டது  என்றும்  இக்காலத்துக்கு  அது  பயன்படாது  என்றும்  அது  கூறிற்று.

“தேசிய  நிந்தனைச்  சட்டத்தின்  இடத்தில் தேசிய  நல்லிணக்கத்தையும்  ஜனநாயக  இலட்சியங்களையும்  ஊக்குவிக்கும்  சட்டத்தைக்  கொண்டு  வர  வேண்டும்.

“இன, சமய  வெறுப்பைத்  தூண்டி  விடுவதற்கு  எதிரான  ஒரு  தெளிவான  சட்டமே   இன்றைய  தேவையாகும்”.

அரசாங்கத்தைக்  குறைகூறுதல்  பற்றிக்  கருத்துரைத்த  ஜி-25,   ஜனநாயகத்தில்  குறைகூறுதல்  குடிமக்களின்  உரிமை  என்று  குறிப்பிட்டது.