கட்டுமானத் தொழிலாளர் சம்பளம் உயர்ந்தால் வீட்டு விலை உயரும்- கைரி எச்சரிக்கை

constகட்டுமானத்  துறைக்கு  உள்நாட்டவரை  ஈர்ப்பதற்காக  அத்துறை  சமபந்தப்பட்ட  வேலைகளுக்குச்  சம்பளத்தை  உயர்த்தினால்  வீடுகளின்  விலையும் உயரும்  என்று  இளைஞர், விளையாட்டு  அமைச்சர்  கைரி  ஜமாலுடின்   கூறினார்.

“அழுக்குப்  பிடித்த வேலைகளை”ச்  செய்யத்  தயாரா  என்று  துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஜிட்  ஹமிடி  விடுத்த  சாவாலை  உள்நாட்டவர்  ஏற்க  வேண்டுமானால்   குறைந்தபட்ச  சம்பளத்தைக்  கூட்ட  வேண்டும்  என்று  வலியுறுத்தப்பட்டிருப்பதற்கு  எதிர்வினையாக  கைரி  இவ்வாறு  கூறியுள்ளார்.

“வளர்ந்த  நாடுகளில் கட்டுமான  வேலைகளுக்கு  உயர்ந்த  சம்பளம்  கொடுக்கப்படுவதாகக்  கூறப்படுகிறது.  அதனால்  அந்ந்நாட்டவர்  அந்த  வேலைகளை  விரும்பிச்  செய்கிறார்கள்.

“தொழிலாளர்  சம்பளம்  உயர்வ்வாக  இருப்பதால்  அங்கு  வீடுகளின்  விலையும்  உயர்வாக  இருக்கிறது”, என  கைரி  டிவிட்டரில்  பதிவிட்டிருந்தார்.