நிதி அமைச்சர் II ஹுஸ்னி ஹனாட்ஸ்லா, அமைச்சுகள் கொடுக்கப்பட்ட நிதியை விவேகமான முறையில் செலவிட வேண்டும் இல்லையென்றால் அவற்றுக்கான ஒதுக்கீடுகள் சீரமைக்கப்பட்ட 2016 பட்ஜெட்டில் குறைக்கப்படும் என எச்சரித்தார்.
அமைச்சுகள் எவ்வளவு சிக்கனப்படுத்துகின்றன என்பதை வைத்துத்தான் இனி, அவற்றின் முக்கிய அடைவுநிலை குறியீடு கணக்கிடப்படும் என்றாரவர்.
“முன்பு ஒரு அமைச்சுக்கு ரிம1 பில்லியன் ஒதுக்கினால் அது அதன் வேலை இலக்குகளுக்கு ஏற்ப ஒதுக்கப்பட்ட தொகை முழுவதையும் செலவிட வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.
“இப்போது அது ரிம900 மில்லியனைச் செலவு செய்தால் போதும் அதன் இலக்கை அடைந்து விட்டதாகக் கருதப்படும்”, என அமைச்சர் த ஸ்டார் நாளேட்டிடம் தெரிவித்தார்.
“உபசரிப்புகளுக்கான செலவுகளையும் அமைச்சுகள் குறைக்க வேண்டும். முன்பு கூட்டங்கள் நடத்தும்போது உணவு பரிமாறப்படுவது உண்டு. இப்போது பானங்கள் மட்டும்தான்”, என்றார்.