முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் வலைப் பதிவுகள் தொடர்பாக போலீசுக்கு நிறைய புகார்கள் வந்திருப்பதாக தேசிய போலீஸ்படைத் தலைவர் காலிட் அபு பக்கார் தெரிவித்தார்..
புகார்கள்மீது போலீஸ் விரைவில் விசாரணைகளைத் தொடங்கும்,.
“புகார்களின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்குவதுதான் வழக்கம்”, என காலிட் இன்று பினாங்கில் தெரிவித்தார்.
எப்போது மகாதிர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வினவியதற்கு, “முதலில் முறைப்படி விசாரிக்க வேண்டும். உணர்ச்சி வசப்படாதீர்கள்.
“நீங்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுகிறீர்கள். நாங்கள் உடனே கைது செய்ய வேண்டும், அதுதானே உங்கள் விருப்பம்” என்று காலிட் குறிப்பிட்டதும் குழுமி இருந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தனர்.
“நாங்கள் முறைப்படிதான் செயல்படுவோம். குற்றம் இழைக்கப்பட்டிருந்தால் மட்டுமே கைது செய்வோம்” என்றாரவர்.
அதோடு சாமிவேலு மீது மக்கள் கொடுத்த போலிஸ் புகாரையும் கொஞ்சம் கவனிங்க துவான்…?
நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்ட ரித்வான் ,ரிஸ்வான் இவர்களுக்கு எதிராக உங்கள் நடவடிக்கை இல்லேயே? பாராமுகமாக செவல்படுவது காவல் துரையின் மீது நம்பிக்கை குறையும்.
“மகாதிருக்கு எதிராக நிறைய போலீஸ் புகார்கள்.” So What ? என்னத்தை கிழிக்கப் போகிறீர்கள்? அவரிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளது. தூக்கிப் போட்டால் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு பின்னாலேயே லோ லோ வென வாலை ஆட்டியவாறு குதித்துக் கொண்டு ஓடும் கூட்டமே போலீஸ் கூட்டம். போலீசுக்கு பத்து வெள்ளி கொடுத்தால் போதும், வாயைப் பொத்திக்கொண்டு போய் விடுவார்கள் மலேசிய போலீஸ், என்கிறான் ஒரு பங்களாதேஷ்காரன். அது அந்த காலம் , ஒரு சிகரெட் கொடுத்தாலே போதும் என்கிறான் மற்றொருவன். உங்கள் லட்சணம், வெளிநாட்டிலிருந்து இங்கே வேலைக்கு வந்தவன் தெரிந்து வைத்துள்ளான்.
இப்படியோ சொல்லி நாளை கடத்த வேண்டாம் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க.நாங்களும் உங்க வீரத்த பார்க்கணுமில்லா.