‘ஒலா போலா’படத்தைப் பார்த்தபின்னர் ஊழலையும் இனவாதத்தையும் எண்ணிக் கவலையுறுகிறார் நசிர்

ola‘ஒலா  போலா’  படம்  மலேசியர்  பலருக்கும்  மலேசியாவின்  வசந்த  காலமாக  திகழ்ந்த  ‘அந்த  நாள்களை’  நினைவுக்குக்  கொண்டு  வந்திருக்கிறது. மகிழ்ச்சி  நிரம்பிய  அந்த  நாள்  நினைவுகளில்  தோய்ந்து  கிடப்போரில்  சிஐஎம்பி  குழுமத்  தலைவர்  நசிர் ரசாக்கும்  ஒருவர். ஒரு  பக்கம்  மகிழ்ச்சி  அடைந்திருந்தாலும்  இன்னொரு  பக்கம்  ஊழலும்  இனவாதமும்  நாட்டைச்  சீரழித்து  வருவதை  எண்ணிக்  கவலையுறுகிறார்  அவர்.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  இளவலான  நசிர்,  அப்படம்  நம்  தேசிய  கால்பந்துக்  குழு  மெர்டேகா  அரங்கில்  மகத்தான   வெற்றி  பெற்ற  அந்த  மகோன்னத  இரவை  நினைவுக்குக்  கொண்டு வந்ததாகக்  குறிப்பிட்டார்.

“இன்னும்  சொல்லப்போனால், அப்போதைய  நனிசிறந்த  மலேசியாவை  அது  நினைவுப்படுத்தியது.

“ஊழல்  வந்து  நம்  கால்பந்தைக்  கெடுத்தது.

“ஊழலும்  இனவாதமும்  நாட்டின்  சீரமைப்பையே கெடுத்து  விட்டன. அதை  நினைக்கையில்  துயரம்  மேலிடுகிறது”, என  நசிர்  பதிவிட்டிருந்தார்.