மதமாற்ற குழந்தை பராமரிப்பு வழக்குகளை விசாரிக்கக் கூட்டு நீதிமன்றம்: ஷியாரியா தலைமை நீதிபதி வரவேற்பு

cjவெவ்வேறு  சமயங்களைச்  சேர்ந்த  கணவன் -மனைவிக்கிடையில்  குழந்தை  பராமரிப்பு  விவகாரத்துக்குத்  தீர்வு  காண  கூட்டுத்  தீர்ப்பாயம்  அமைக்கலாம்  என்ற  பரிந்துரைக்கு  ஷியாரியா   தலைமை  நீதிபதி  இப்ராகிம்  லெம்புட்  முழு  ஆதரவு  தெரிவித்துள்ளார்.

“நான்  முழுமையாக  ஓத்துக்கொள்கிறேன். ஒரே  நீதிமன்றத்தில்  சிவில்  நீதிபதியும்  ஷியாரியா  நீதிபதியும்  இருந்து  விசாரிக்கலாம்  என்ற  எண்ணம்  எங்களுக்கும்  இருந்தது”,  என  இப்ராகிம்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

முஸ்லிம்  வழக்குரைஞர்கள்  சங்கம்  முன்வைத்த  அப்பரிந்துரை குறித்து  அவர்  கருத்துரைத்தார். அச்சங்கம் ஆட்சியாளர்  மன்றப்  பேராளர்   ஒருவரும்  அத்தீர்ப்பாயத்தில்  இடம்பெற்றிருப்பதை  விரும்புகிறது.

எஸ். தீபாவின் குழந்தை  பராமரிப்பு  வழக்கில் கூட்டரசு  நீதிமன்றம்  அளித்த  தீர்ப்பை  அடுத்து  இப்படியொரு  பரிந்துரை  முன்வைக்கப்பட்டது.

அவ்வழக்கில்  கூட்டரசு  நீதிமன்றம்  மகளை தீபாவிடமும்  மகனை  அவரின்  முன்னாள்  கணவர்  இஸ்வான்  அப்துல்லாவிடமும்  ஒப்படைத்தது.